search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீராவி வெளியேற்றும் சோதனை"

    கூடங்குளம் அணு உலையில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest

    கூடங்குளம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழுதினை சரிசெய்யும் பணியில் இந்திய, ரஷ்ய விஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் அணு உலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சவுத்ரி தெரிவித்தார். #Kudankulam #nuclearpowerplant #Steamevacuationtest
    ×